இணையவழியில் சட்டமன்ற தேர்தல் விநாடி வினா போட்டி: முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.15,000 வழங்கப்படும். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 20, 2020

இணையவழியில் சட்டமன்ற தேர்தல் விநாடி வினா போட்டி: முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.15,000 வழங்கப்படும்.

 இணையவழியில் சட்டமன்ற தேர்தல் விநாடி வினா போட்டி:


முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.15,000 வழங்கப்படும்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில அளவிலான இணையவழி வினாடி வினா போட்டி நடக்கிறது. 


இதில் ஆர்வமுள்ள மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். போட்டியில் அனைத்து சுற்றுகளும் “Goal Quiz sports” என்ற YouTube இணையவழி தளத்தில் நடத்தப்ப டும். இதில் பங்கேற்கும் ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக முதல் நிலைப்போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல்நிலை போட்டி மூன்று சுற்றுகளை கொண்டது.


 முதல் சுற்று போட்டி வருகிற 25ம் தேதி மாலை 4 மணிக்கும், 2ம் சுற்று 26ம் தேதி காலை 11 மணி, மூன்றாம் சுற்று 26ம் தேதி மாலை 4 மணிக்கும் நடைபெறும். சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே பின்வரும் சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர்.


 ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பதிலை பதிவிட வேண்டும். முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.15,000 வழங்கப்படும்.

No comments:

Post a Comment