எல்லோரும் தேர்ச்சி அறிவிப்பை விட சிறந்தது டிப்ளமோ அரியர் மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு: ஐகோர்ட் கிளை கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 20, 2020

எல்லோரும் தேர்ச்சி அறிவிப்பை விட சிறந்தது டிப்ளமோ அரியர் மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு: ஐகோர்ட் கிளை கருத்து

 எல்லோரும் தேர்ச்சி அறிவிப்பை விட சிறந்தது டிப்ளமோ அரியர் மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு: ஐகோர்ட் கிளை கருத்து


எல்லோரும் தேர்ச்சி அறிவிப்பை விட, டிப்ளமோ அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த மீண்டும் வாய்ப்பு வழங்குவது சிறப்பாக இருக்கும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.


 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதுக்கோட்டை பாலிடெக்னிக்கில் சிவில் இன்ஜினியரிங் படிக்கிறேன். அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் முடிந்து விட்டது.


 கொரோனா ஊரடங்கால் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் போனது. எனவே, என்னை தேர்வெழுத அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.


மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் முந்தைய தேர்வில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளார்.


 இதன் முடிவு வருவதற்குள் அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் கால அவகாசம் முடிந்து விட்டது. மறு மதிப்பீட்டில் தோல்வி உறுதியானதால், தேர்வு கட்டணம் செலுத்த முயன்றுள்ளார். 


ஆனால் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமும் முடிந்து விட்டது. எனவே, மாணவரின் எதிர்கால நலன் கருதி அரியர் பாடங்களுக்கான தேர்வு கட்டணம் செலுத்த கடைசியாக மேலும் ஒரு வாய்ப்பு வழங்கலாம்.


 மனுதாரருக்கு மட்டுமின்றி, இவரைப் போன்ற மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கலாம்.


 இப்படி வாய்ப்பு வழங்குவது என்பது கொரோனாவால் தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் எல்லாம் தேர்ச்சி என்ற அறிவிப்பை விட சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment