கால்நடை மருத்துவர் பணி: முடிவு வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 20, 2020

கால்நடை மருத்துவர் பணி: முடிவு வெளியீடு

 கால்நடை மருத்துவர் பணி: முடிவு வெளியீடு


அரசு கால்நடை மருத்துவர் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:கால்நடை பராமரிப்பு பணிக்கான, கால்நடை உதவி மருத்துவர் பதவியில், 1,141 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு பிப்., 23ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.


தேர்வில், 2,015 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,942 பேர் தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். 



தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 28ம் தேதி முதல், நவ., 6 வரை ஆன்லைன் வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், தொல்லியல் துறை பணி தேர்வு; தமிழக தொழில்நுட்ப துறையில், உதவி இன்ஜினியர் பணிக்கான தேர்வு; 'குரூப் ~ 2' நேர்முக தேர்வு மற்றும் டி.இ.ஓ., தேர்வுக்கும் முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment