இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2ம் சுற்று 23 ஆயிரம் பேருக்கு சீட் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 18, 2020

இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2ம் சுற்று 23 ஆயிரம் பேருக்கு சீட்

 இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2ம் சுற்று 23 ஆயிரம் பேருக்கு சீட்


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' வழியில் மேற்கொள்ளப்படுகிறது.


மொத்தம், 461 கல்லூரிகளில் உள்ள, 1.63 லட்சம் இடங்களுக்கு, 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில், முதல் சுற்றில், 12 ஆயிரம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.


 இரண்டாம் சுற்றுக்கு, நேற்று முன்தினம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 145.5 வரை, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 23 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.


அவர்களுக்கு உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. அவற்றை, இன்று மாலைக்குள் உறுதி செய்தால், நாளை இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும்.


இதையடுத்து, மூன்றாம் சுற்றுக்கு, நாளை முதல் விருப்ப பதிவு துவங்க உள்ளது. 145 முதல், 111.75 வரை, கட் ஆப் மதிப்பெண் பெற்ற, 35 ஆயிரம் பேருக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.


 அவர்களுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று மாலையுடன் முடிகிறது. இதற்கிடையில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, கவுன்சிலிங் வாயிலாக ஒதுக்கீடு மாணவர்கள், வரும், 22 முதல், 28ம் தேதிக்குள், கல்லுாரிகளில் ஆன்லைன் வழியே கட்டணம் செலுத்துமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


அண்ணா பல்கலையின், கிண்டி இன்ஜி., கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றுக்கு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment