நீட் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 18, 2020

நீட் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்

 நீட் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்


நீட் பாடங்களை, தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்,'' என, மாணவர் ஜீவித் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசுப் பள்ளி மாணவர் ஜீவித் குமார். 'நீட்' தேர்வில், 664 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவிலும், இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில், முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தனியார் பள்ளியில், நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி பெற்றார். பயிற்சி மையத்தில், நேற்று அவரை பாராட்டி, பரிசளித்தனர். ஜீவித் குமார் கூறியதாவது:


நீட் தேர்வு பயிற்சியில், ஆங்கில வழியில் உள்ளதை, தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தால், தமிழ் வழியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெறலாம். என்.சி.ஆர்.டி., பாடத் திட்டம் ஆங்கிலத்தில் தான் உள்ளது.


இதை, அரசுப் பள்ளி மாணவர்கள், புரிந்து படிப்பது கடினம்.


 என்னைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் பயின்றாலும், வீட்டிலிருந்தே நன்றாக தெரிந்தும், புரிந்தும் படித்தால் வெற்றி பெற முடியும்.டாக்டராக வேண்டும் என்ற ஆசையில் படிக்கவில்லை.


 நீட் தேர்வில் வெற்றி பெற, முடிவு செய்து படித்தேன். பிளஸ் 2 தேர்வில், 548 மதிப்பெண் பெற்றிருந்தாலும், அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர, நீட் தான் காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment