தஞ்சை தமிழ் பல்கலையில் தள்ளுபடியில் புத்தக விற்பனை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 18, 2020

தஞ்சை தமிழ் பல்கலையில் தள்ளுபடியில் புத்தக விற்பனை

 தஞ்சை தமிழ் பல்கலையில் தள்ளுபடியில் புத்தக விற்பனை


தஞ்சை தமிழ் பல்கலையில், பாதி விலையில் நுால்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


தஞ்சை தமிழ் பல்கலையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15 முதல், 30 நாட்களுக்கு தமிழ் பல்கலையின் வெளியீடுகளை, சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது வழக்கம். இந்தாண்டும் அக்., 14 வரை தள்ளுபடி விற்பனை நடந்தது. 


வாசகர்கள், ஆய்வாளர்கள், பொது மக்களிடம் நுால்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. எனவே, வரும், 30ம் தேதி வரை, இந்த தள்ளுபடி விற்பனையை, தமிழ் பல்கலை நீட்டித்துள்ளது.


 தமிழறிஞர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

No comments:

Post a Comment