தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் கட்டணம் தள்ளுபடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 1, 2020

தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் கட்டணம் தள்ளுபடி

 தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் கட்டணம் தள்ளுபடி


குஜராத் மாநிலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது.


இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா அச்சம் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நிலவிவந்தது. இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து வந்தோர் வேலையிழந்தனர். 


கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால் தங்களின் நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறின. இதனிடையே பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ,மாணவியரின் பெற்றோர்களிடம் முழு கட்டணத்தை வசூலிக்க கூடாது. அதே நேரத்தில் 75 சதவீதம் அளவிற்கு மட்டும் கட்டண தொகையை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது. 


இதனையடுத்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் 75 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலித்துள்ளன,


இந்நிலையில் மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய 5~ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.


 அதில் வரும் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.


 இதனிடையே குஜராத் மாநில அரசின் கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாஸ்மா பெற்றோர்கள் , சி.பி.எஸ்.இ., ஐ.பி., ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.எஸ்.இ.,உள்ளிட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


 தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகட்டணத்தில் 25 சதவீதம் அளவிற்கு குறைத்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 


கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும்31 ம் தேதிக்குள் கட்டணத்தில் 50 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் முழு கட்டணத்தை செலுத்திய வர்களுக்கும் அதற்கான சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment