தேர்வாணையர் கையெழுத்தின்றி வெளியான மதிப்பெண் பட்டியல்: மீண்டும் அரங்கேறிய முறைகேடு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 1, 2020

தேர்வாணையர் கையெழுத்தின்றி வெளியான மதிப்பெண் பட்டியல்: மீண்டும் அரங்கேறிய முறைகேடு

 தேர்வாணையர் கையெழுத்தின்றி வெளியான மதிப்பெண் பட்டியல்:  மீண்டும் அரங்கேறிய முறைகேடு


மதுரை காமராஜ் பல்கலை விடைத்தாள் மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தேர்வாணையர் கையெழுத்து இல்லாமல், மதிப்பெண் பட்டியல் வெளியாகி, மீண்டும் ஒரு முறைகேடு அரங்கேறியுள்ளது.


இப்பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.ஏ., ஆங்கிலம் முடித்த மாணவி ரேவதிக்கு, மதிப்பெண் பட்டியல் வழங்குவதில் தாமதம்ஏற்பட்டது.அதனால், வேதியியல் துறை தற்காலிக ஊழியர் செந்தில் உதவியுடன், தேர்வாணையர் கையெழுத்து, முத்திரை இல்லாத மதிப்பெண் பட்டியல் பெற்று, 'புரவிஷனல் சர்ட்டிபிகேட்' பெற, தேர்வாணையர் ரவிக்கு விண்ணப்பித்து உள்ளார்.


அவர் அதை பரிசீலித்த போது 'தன் கையெழுத்து இல்லாத மதிப்பெண் சான்றிதழ் எப்படி வெளியானது' என விசாரணையில் இறங்கினார்.


இதுதொடர்பாக, துணைப்பதிவாளர் சுப்பிரமணி, கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம், ஊழியர் மலர் ஆகியோருக்கு 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளார்.


தொடரும் தவறுகள்...


விடைத்தாள் முறைகேடு குறித்து, சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையிலான குழு, சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு பரிந்துரைத்த அறிக்கை யில், துணைப் பதிவாளர் சுப்பிர மணி சுட்டிக் காட்டப்பட்டுள்ளார்.


விடைத்தாள் முறைகேடு நடந்த போதே, சம்மந்தப்பட்டோர் மீது துணைவேந்தர் கிருஷ்ணன் நடவடிக்கை எடுத்திருந்தால், ஊழியர்களிடையே பயம் ஏற்பட்டிருக்கும்.தண்டிக்க தவறியதால், பல்கலையில் மீண்டும் தவறுகள் நடக்க துவங்கியுள்ளன என பேராசிரியர்கள், அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment