பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு: பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்பாடு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, October 14, 2020

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு: பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்பாடு

 பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு: பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்பாடு


பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.


கடந்த மார்ச்சில் நடந்த, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, ரிசல்ட் வெளியானதும், தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ், நேற்று முதல் வழங்கப்படுகிறது.


 மாணவர்கள், தங்கள் பள்ளிகளுக்கு சென்று, சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது


இந்நிலையில், பள்ளிகளுக்கு சான்றிதழ் பெற செல்லும் மாணவ - மாணவியருக்கு, அவர்களின் பிளஸ் 1, பிளஸ் 2 சான்றிதழை வைத்து, வேலைவாய்ப்பு பதிவை, பள்ளிகளிலேயே புதுப்பித்து தர வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது


. வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யப்படும் அனைவருக்கும், ஒரே பதிவு மூப்பு வழங்கப் படுவதால், பதிவு செய்ய தவறு வோரும், 30ம் தேதிக்குள், பள்ளிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment