ஆன்லைன் செமஸ்டர் ரிசல்ட் வெளியீடு
சென்னை பல்கலையின், 'ஆன்லைன் செமஸ்டர்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, கல்லுாரி மற்றும் பல்கலைகளின், செமஸ்டர் தேர்வுகளை, உயர்கல்வி துறை ரத்து செய்தது.
இறுதி ஆண்டு மாணவர்களை தவிர, மற்றவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு, 'அரியர்' மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்த, அரசு அனுமதித்தது. அதன்படி, சென்னை பல்கலை உள்ளிட்ட பல்கலைகள், செப்டம்பரில் தேர்வை நடத்தின.
சென்னை பல்கலை சார்பில், 'ஆன்லைன்' வழியில் நேரடி எழுத்து தேர்வு நடத்தப் பட்டது. மாணவர்கள், வீட்டில் இருந்தே தேர்வை எழுதி, தபால் மற்றும் ஆன்லைனில் விடைத்தாள்களை அனுப்பினர்.
இந்த வினாத்தாள்கள் திருத்தப்பட்டு, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.தேர்வு முடிவுப்படி, 90 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், முந்தைய தேர்வுகளை விட, இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். சில மாணவர்கள், புத்தகத்தில் உள்ள விடையை, அப்படியே எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment