மகளிர் பாலிடெக்னிக்கில் 3ம் கட்ட கலந்தாய்வு: விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

மகளிர் பாலிடெக்னிக்கில் 3ம் கட்ட கலந்தாய்வு: விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

 மகளிர் பாலிடெக்னிக்கில் 3ம் கட்ட கலந்தாய்வு: விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு


அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


 சென்னை தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செண்பகவள்ளி வெளியிட்ட அறிவிப்பு:  


சென்னை தரமணியில் இயங்கி வரும் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021ம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ என்ஜியரிங் படிப்பு முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் நடைபெற்றது.


 இக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் காலி இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் உரிய சான்றிதழ், ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு 044-22542013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டிப்ளமோ பயில விரும்பும் மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி அரசின் விதிகளுக்கு உட்பட்டு 2ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment