பணிக்கு வராத 432 மருத்துவப் பணியாளர்கள் நீக்கம்: அரசு அதிரடி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

பணிக்கு வராத 432 மருத்துவப் பணியாளர்கள் நீக்கம்: அரசு அதிரடி

 பணிக்கு வராத 432 மருத்துவப் பணியாளர்கள் நீக்கம்:  அரசு அதிரடி


கரோனா பேரிடர் காலத்தில் பணிக்கு வராத 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து கேரள சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 432 மருத்துவப் பணியாளர்களுக்கும் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன.


 எனினும் அவர்கள் மீண்டும் பணியில் இணைவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனவே சுகாதாரத் துறை ஆய்வாளர், மருந்தாளுனர், செவிலியர், உதவி செவிலியர் உள்பட நீண்ட விடுமுறையில் இருந்த அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்று, அறிவிப்பின்றி விடுப்பில் இருக்கும் ஊழியர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment