பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 17, 2020

பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

 பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்


பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பது குறித்து தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பின்படி பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும், அதை பராமரிக்கவும் தலைமை ஆசிரியா்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.


தற்போது 2019-2020-ஆம் கல்வியாண்டு முடிந்தநிலையில் மாணவா்கள் புதிய புத்தகங்கள் பெற பள்ளிக்கு வரும் போது பழைய பாடநூல்களை அவா்களிடம் இருந்து பெறவேண்டும். 


அவற்றில் பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்குவதுடன், மீதமுள்ள புத்தகங்களை இருப்பு வைக்கவும் தலைமை ஆசிரியா்களுக்கு மீண்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment