ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 9, 2020

ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை

 ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை


பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான வயது வரம்பு குறைக்க பட்டு உள்ளது. இனி, 40வயதுக்கு மேலானவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது.


தமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக ரீதியாகபல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


 அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில், புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், வட்டார கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பு, 40 வயது என, முடிவு செய்யப்பட்டது.


 இந்த அரசாணையின் நகல், தற்போது அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


இந்த அரசாணையை பின்பற்றி மட்டுமே, இனி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதுவரை, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதான, 58 வயது நிரம்பாத அனைவரும், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 


மேலும், 58 வயது வரை உள்ளவர்களுக்கு பணி வழங்குவதால், அவர்களிடம் இருந்து போதிய அளவில் பணியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.


சிலர் ஒரு மாதம், இரண்டு மாதம் மட்டும் அரசு பணியில் இருந்து விட்டு, பல வருடங்கள் பென்ஷன் பெறும் நிலை ஏற்பட்டது. 


அதனால், அரசுக்கும் தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதை தவிர்க்கவே, 40 வயதுக்கு மேல் நியமனம் இல்லை என, முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. முழுமையான சரியான தெளிவான உண்மையான செய்திகளை மட்டும் தயவுசெய்து வெளியிடுங்கள்.
    தின மலம் போல மேலோட்டமான செய்திகளை தவிர்ப்பது நல்லது.

    ReplyDelete