7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 18, 2020

7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

 7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன்


7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்கும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதல்வர் இயற்றினார்.


 இதன் மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளது.


தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்துதான், நீட் தேர்வின் 180 கேள்விகளில், 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


 இ-பாக்ஸ் மூலம் நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. இந்த தேர்வை முதன்முறையாக எழுதி தோல்வியடைந்தவர்கள், 2-வது முறையாக எழுத வாய்ப்புள்ளது.


 அவ்வாறு எழுதும் மாணவர்கள், அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர முடியாது. தேவைப்பட்டால் தனியார் மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதலாம் என்றார்.

No comments:

Post a Comment