வங்கி உதவியாளர் வேலைக்கு 9ல் நேர்முக தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 31, 2020

வங்கி உதவியாளர் வேலைக்கு 9ல் நேர்முக தேர்வு

 வங்கி உதவியாளர் வேலைக்கு 9ல் நேர்முக தேர்வு


கூட்டுறவு வங்கிகளில், உதவியாளர் பதவிக்கான நேர்முக தேர்வு, வரும், 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை நடக்கிறது.


இது குறித்து, கூட்டுறவுசங்கங்களின் பதிவாளரும்,மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவருமான இல.சுப்ரமணியன் அறிவிப்பு:


தலைமை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள, 300 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப, மாநில ஆள்சேர்ப்பு நிலையம், சென்னையில், மார்ச், 1ல், எழுத்து தேர்வு நடத்தியது


.எழுத்து தேர்வு முடிவுகள், அக்., 16ம் தேதி, ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.


அதைத் தொடர்ந்து, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு, நேர்முக தேர்வு, வரும், 9 முதல், 11ம் தேதி வரை, சென்னையில் நடக்க உள்ளது.


அதில் பங்கேற்பதற்காக விண்ணப்பதாரர்கள், நேர்முக தேர்வு அனுமதி சீட்டை, மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின், www.tncoopsrb.inஎன்ற, இணையதளத்தில்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment