ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு அண்ணா பல்கலை அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 31, 2020

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு அண்ணா பல்கலை அறிவிப்பு

 ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு அண்ணா பல்கலை அறிவிப்பு


அண்ணா பல்கலையின், டிசம்பர் மாத தேர்வு, ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும், அண்ணா பல்கலையின் கல்வி பிரிவு இயக்குனர், ஹோசிமின் திலகர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


கொரோனா தொற்று காரணமாக, நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். ஒரு மணி நேரம் தேர்வு நடக்கும்.


நினைவு திறனை அறிய, 30 மதிப்பெண்களுக்கும், சிந்திக்கும் திறனை அறிய, 30 மதிப்பெண்களுக்கும், மல்டிபிள் சாய்ஸ் வகை வினாத்தாளில் தேர்வு நடத்தப்படும். 


இதன் படியே, அரியர் மாணவர்களுக்கும் வினாத்தாள் அமைக்கப்படும். தொலைநிலை கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆன்லைன் தேர்வே நடத்தப்படும்.


ஆய்வகங்களில் அளிக்கப்படும் பயிற்சிகளை, ஆன்லைனில் நடத்த வேண்டும். ஆனால், ஆய்வக பயிற்சியில், மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பெண்களை, அவர்கள் ரெகுலர் வகுப்புக்கு வந்த பின் வழங்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில், இறுதி பருவ தேர்வில், அரியர் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு, அக மதிப்பெண் நிர்ணயிப்பதில், சில வழிமுறைகளை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


 அதன்படி, அரியர் மாணவர்கள் இறுதி செமஸ்வர் தேர்வு வரை எடுத்த, கிரேடு மதிப்பெண்களில் இருந்து, 70 சதவீதமும், அவர்கள் பங்கேற்ற ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் இருந்து, 30 சதவீத மதிப்பெண்ணும் கணக்கிடப்படும் என, அண்ணா பல்கலையின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment