சி.ஏ., தேர்வில் பங்கேற்க 'ஹால் டிக்கெட்' வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 31, 2020

சி.ஏ., தேர்வில் பங்கேற்க 'ஹால் டிக்கெட்' வெளியீடு

 சி.ஏ., தேர்வில் பங்கேற்க 'ஹால் டிக்கெட்' வெளியீடு


ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி மையம் நடத்தும், சி.ஏ., தேர்வில் பங்கேற்போருக்கு, இன்று, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது.


 இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:


வரும், 21 முதல் டிச., 14 வரை, சி.ஏ., எனப்படும், பட்டயக் கணக்காளர் கல்வித் தேர்வுகள் நடக்கவுள்ளன. இவற்றில் பங்கேற்பதற்கான, ஹால் டிக்கெட், இன்று www.icai.org என்ற வலைதளத்தில் வெளியிடப்படும்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அல்லது அதன் அறிகுறிகள் உள்ள, தேர்வில் பங்கேற்க இயலாதோருக்கான தனி பிரிவும், வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே தேர்வுக்கு பணம் செலுத்தி, பங்கேற்க இயலாதோர், இப்பிரிவில் தெரிவிக்கலாம்.


அவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட இதர சலுகைகளை, அடுத்த தேர்வுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம். அடுத்த தேர்வு, வரும், 2021ம் ஆண்டு, மார்ச்சில் நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


 கடந்த மே மாதம் நடக்க வேண்டிய, சி.ஏ., தேர்வுகள், கொரோனா ஊரடங்கு காரணமாக, பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, இறுதியாக தற்போது நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment