பள்ளி மாணவர்களுக்கு 9 புதிய திட்டத்தை தொடங்கினார் முதல்வர் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

பள்ளி மாணவர்களுக்கு 9 புதிய திட்டத்தை தொடங்கினார் முதல்வர்

 பள்ளி மாணவர்களுக்கு 9 புதிய திட்டத்தை தொடங்கினார் முதல்வர்


ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், புனாதிபாடு அரசுப் பள்ளியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ‘ஜெகன் அண்ணா கல்விப் பரிசு’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அங்குள்ள மாணவ, மாணவியருக்கு இலவச ‘கிட்’களை அவர் வழங்கினார்.


நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “கல்விப் பரிசு திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் 3 ஜோடி சீருடைகள், ஷு, 2 ஜோடிசாக்ஸ்கள், புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப் பை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக அரசு ஆண்டுக்கு ரூ.650 கோடி செலவிடுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து, 34,322 மாணவர்கள் பலன் அடைவார்கள். கல்வியே நாம் அவர்களுக்கு கொடுக்கும் அழியாத சொத்து. 


சீருடைகளை தைப்பதற்கான கூலி, மாணவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கரோனா பாதிப்பை தடுக்க, மாணவ, மாணவியருக்கு தலா 3 முகக் கவசம் வழங்கப்படுகிறது


எனவே பள்ளி திறப்பதற்கு முன் அனைவரும் சீருடைகளை தைத்துக் கொண்டு, உரிய பாதுகாப்புடன் பள்ளிக்கு வரவேண்டும்” என்றார்.


முன்னதாக, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவியருடன் கலந் துரையாடிய முதல்வர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

1 comment: