உரிமையியல் நீதிபதி பதவி தொடர்பாக TNPSC வெளியிட்டுள்ள செய்தி - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

உரிமையியல் நீதிபதி பதவி தொடர்பாக TNPSC வெளியிட்டுள்ள செய்தி

 உரிமையியல் நீதிபதி பதவி தொடர்பாக TNPSC வெளியிட்டுள்ள செய்தி


உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டு பெறுவது தொடர்பான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில், எண்.25,2019 வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 17-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் 18-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னையில் நடைபெற உள்ளது.


தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான  www.tnpscexams.net / www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது,


முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண், அல்லது பயனாளர் குறியீடு (லாகின் ஐடி) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது  cantacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment