கேட்’ நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 30, 2020

கேட்’ நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிப்பு

 கேட்’ நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில்  திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிப்பு


பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில் நவ.13-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஐஐடி மும்பை அறிவித்துள்ளது.


ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட்  நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. 


மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தோ்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டா் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.


கேட் நுழைவுத்தோ்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, தில்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு ஐஐடி மும்பை தோ்வை நடத்துகிறது.


இந்நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கேட் நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில் நவ.13-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஐஐடி மும்பை அறிவித்துள்ளது.


தோ்வு எழுதுவதற்கான நகரத்தை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் பாடப் பிரிவு, தாள், பாலினம் ஆகியவற்றைக் கூடுதல் கட்டணம் செலுத்தி மாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment