ஆன்லைன் தேர்வில் கோல்மால்! செயற்கை நுண்ணறிவால் ஆய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

ஆன்லைன் தேர்வில் கோல்மால்! செயற்கை நுண்ணறிவால் ஆய்வு

 ஆன்லைன் தேர்வில்  கோல்மால்! செயற்கை நுண்ணறிவால் ஆய்வு


கோவை:இறுதியாண்டு மாணவர்களுக்கு, நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் மோசடியில் ஈடுபட்டவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், கண்டறியப்பட்டு வருகின்றனர்


.கொரோனா காரணமாக, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

இந்த ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் எழுதும் போது, அதனை கூகுள் மீட் வழியாக கண்காணித்து, மேற்பார்வை செய்ய, பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.


 தேர்வுகளை மாணவர்கள் தான் எழுதுகின்றார்களா என்று மேற்பார்வை செய்தனர்.


அதேபோன்று மாணவர்களின் விபரங்கள், புகைப்படம், மொபைல்போன் எண், இ-மெயில் முகவரி, அவர்களுக்கான தனிப்பட்ட தேர்வு எழுதுவதற்கான இணையதளத்தில் இருக்கும்.


ஆன்லைன் மூலம் நடந்த தேர்வில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.


அப்போது சில மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்வு எழுதும்போது, குறிப்பிட்ட அறையில் கேமராவுக்கு தெரியாமல் நண்பர்கள் படுத்து கொண்டதாகவும், அவர்களிடம் கேட்டு மாணவர்கள் தேர்வு எழுதியதும், நண்பர்களுடன் அமர்ந்து ஆள்மாறாட்டம் செய்து எழுதியதும் தெரியவந்துள்ளது


தேர்வுக்கான விதிமுறைகளில், ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்தில் தேவையில்லாத சப்தம் எழுந்தால், மாணவரின் தேர்வு செல்லாது என்றும், ஆன்லைன் தேர்வுக்கான மின்னணு சாதன ஏற்பாடுகளை, மாணவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தேர்வின்போது நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்தபின், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என, கல்லூரி மற்றும் பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தேர்வு எழுதும்போது, குறிப்பிட்ட அறையில் கேமராவுக்கு தெரியாமல் நண்பர்கள் படுத்து கொண்டு அவர்களிடம் கேட்டு மாணவர்கள் தேர்வு எழுதியதும், நண்பர்களுடன் அமர்ந்து ஆள்மாறாட்டம் செய்து எழுதியதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment