வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை: தகுதியானவர் விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை: தகுதியானவர் விண்ணப்பிக்க அழைப்பு

 வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை: தகுதியானவர் விண்ணப்பிக்க அழைப்பு


நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள், ஐந்து ஆண்டுகளுக்குள் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மாதம், 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய். 


பிளஸ் 2 மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வீதம், மூன்றாண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, மாதம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 600 ரூபாய், மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், பத்தாண்டு காலத்திற்கும் வழங்கப்படுகிறது.


 இத்திட்டத்தின் கீழ், தற்போது, டிச., 31 உடன் முடிவடைந்த காலாண்டுக்கு, மேற்கண்ட கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஒரு ஆண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகளும், உரிய விண்ணப்பங்களை, https://tnvelaivaaippu.gov.in or www.tn.velaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment