கண்ணாடி பாட்டிலில் கலை வண்ணம்: பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

கண்ணாடி பாட்டிலில் கலை வண்ணம்: பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி

 கண்ணாடி பாட்டிலில் கலை வண்ணம்: பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி


குப்பையில் வீசி எறியும் காலி பாட்டில்களை, கலைநயம் மிக்க காட்சிப் பொருளாக மாற்றிபழங்குடியின மாணவர்கள் வியப்பை ஏற்படுத்தி உள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர்கள் வைஷ்ணவி, விசாக்.


 இவர்கள் பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் உள்ள, 'எனாக்டஸ்' கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். கூடலுார் கலை கல்லுாரியில் படிப்பவர் கவுதம். 


இவர்கள் மூவரும் இணைந்து, பந்தலுார் அருகே, உள்ள சோலாடி பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து, சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


வீணாக துாக்கி எறியப்படும் கண்ணாடி பாட்டில்களில், களிமண், சணல் நுால், பசை, வண்ணங்களை கொண்டு அழகிய ஓவியங்களை வரைந்துள்ளனர். இந்த கண்ணாடி பாட்டிலுக்குள் மின்விளக்கை எரிய வைத்துள்ளனர்.


அழகாக காட்சி தரும், இந்த பாட்டில்கள்,ஓட்டல்கள் மற்றும் மால்களில், 2,000 முதல் 3,000 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்துள்ளனர். பழங்குடி மாணவர்களுக்கு, சுய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.


இந்த மாணவர்கள் கூறுகையில்,'பழங்குடிகளுக்கு, இத்தகைய பயிற்சியை அளிப்பதில்,மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கும் சுய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment