கல்வி வீடியோ: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

கல்வி வீடியோ: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

 கல்வி வீடியோ: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு


குழந்தையின், அடிப்படை கல்வி கற்பிக்கும் வீடியோவை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஊரடங்கு துவங்கிய நாளில் இருந்தே, அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், வீடு தேடிச்சென்று வழங்கப்படுகிறது. அடிப்படை கல்வியை, 'வீடியோ' மூலமாக கற்பிக்க அரசு உத்தரவிட்டது. கடந்த மூன்று மாதமாக, ஆசிரியர்கள் நடத்தும் அடிப்படை பாட வகுப்பு வீடியோ, பெற்றோரின் மொபைல் போன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


இதை உறுதி செய்யும் வகையில், பதில் வீடியோ பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:


பெற்றோரின் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும் பாடத்தை, குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.


 அதன்பின், குழந்தைகள் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து, அமைப்பாளர் மொபைல் போனுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளோம்.அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.


 இதனால், ஊட்டச்சத்து உணவப்பொருள் பெற்ற குழந்தைகள், அடிப்படை கல்வி கற்பதும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment