'நீட்'டில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

'நீட்'டில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்

 'நீட்'டில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த  மாணவர்


நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர், இதய மருத்துவராவதே லட்சியம்' என்றார்.


நீட் தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீஜன், 710 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம், இந்திய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.


ஸ்ரீஜன் கூறியதாவது:


வெள்ளக்கோவிலில் தனியார் பள்ளியில், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படித்தேன்.


 மூன்றாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரை, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ., படித்தேன். கடந்த, 201௮ ~ ௧௯ல் நடந்த நீட் தேர்வில், 385 மதிப்பெண் பெற்றேன். 


ஒரே நேரத்தில் பிளஸ் 2 தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் படித்ததால், மதிப்பெண் குறைந்தது. இதனால், நாமக்கல்லில் கிரீன்பார்க் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்.


 கொரோனா தொற்றால், 'ஆன்லைன்' மூலம் வகுப்பு நடந்தது.தினமும் காலை, 5:00 மணிக்கு எழுந்து படிப்பேன். ஒரு நாளைக்கு சராசரியா, 10 மணி நேரம் படித்தேன். புதுச்சேரி, ஜிப்மர் கல்லுாரியில் மருத்துவம் படிக்க வேண்டும். இதய மருத்துவராவதே என் லட்சியம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment