அரியர் மாணவர்களின் தேர்ச்சி தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: துணைவேந்தர் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 31, 2020

அரியர் மாணவர்களின் தேர்ச்சி தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: துணைவேந்தர் தகவல்

 அரியர் மாணவர்களின் தேர்ச்சி தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: துணைவேந்தர் தகவல்


சென்னைப் பல்கலைக்கழக செனட் கூட்டம் துணைவேந்தர் கவுரி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதன் பின் அவர் அளித்த பேட்டி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.


 தமிழக அரசுடன் இணைந்து ஆராய்ந்து வருகிறோம். இதை உடனடியாக அமல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. 


அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கிறோம்

No comments:

Post a Comment