இளநிலை பட்ட படிப்புகள் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 31, 2020

இளநிலை பட்ட படிப்புகள் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

 இளநிலை பட்ட படிப்புகள் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிப்பு


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


 தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்  www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.


 பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.சுகுமார் இவ்விவரங்களை இணையதளத்தில் www.tnjfu.ac.in வெளியிடுகிறார். 


இவ்வாண்டு மொத்தமுள்ள 386 இடங்கள் கொண்ட பத்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணைய வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


 சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வரும் 7ம்தேதி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் வைத்து நடைபெறும். மேலும், பொது கலந்தாய்வானது இந்த ஆண்டு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment