பள்ளி கல்வித்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 31, 2020

பள்ளி கல்வித்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 பள்ளி கல்வித்துறை செயலருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வீடியோ கான்பரன்சில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த எல்.முருகானந்தம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:


 தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தரப்படவில்லை.


 குறிப்பாக சாய்தள பாதை, பிரத்யேக நடைபாதை, கழிவறைகள் மற்றும் மின்தூக்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இல்லை. இது மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், தமிழகத்தில் 25.95 சதவீத பள்ளிகளில் மட்டுமை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான கழிவறைகள் உள்ளன. 62.86 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி மாணவர்கள் தடையின்றி செல்ல உதவும் சாய்தள நடைமேடை வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 


அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல், அனைத்து அரசு பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சாய்தள நடைமேடை, உள்ளிட்ட வசதிகள் குறித்த திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment