வாசிப்புத்திறனை மேம்படுத்த திட்டம் ;கல்வித்துறை அறிவுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

வாசிப்புத்திறனை மேம்படுத்த திட்டம் ;கல்வித்துறை அறிவுறுத்தல்

 வாசிப்புத்திறனை மேம்படுத்த திட்டம் ;கல்வித்துறை அறிவுறுத்தல்


உடுமலை;அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த, கல்வித்துறையின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.


 இருப்பினும், மாணவர்கள் பாடப்புத்தகங்களை தவிர, நூலக தேடல்கள் அதிகரிக்கவில்லை. இதற்கான முயற்சிகளை நூலகத்துறையும், குழந்தைகள் வாசகர் வட்டம் திட்டத்தை செயல்படுத்தி, வருகிறது.


உடுமலை கல்வி மாவட்டத்தில், ஒரு சில நூலகங்களில் மட்டுமே இத்திட்டத்தை அடுத்தநிலைக்கு எடுத்துச்சென்று, தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, நூலகத்துறை மீண்டும் ஒரு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. 


இதில், ஒரு கல்வியாண்டில் நூலகத்தை அதிக நேரம் பின்பற்றும் மாணவர்களில், ஒரு மாவட்டத்தில் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.


மாணவர்களை நூலகத்துக்கு வர ஊக்குவித்து செயல்படும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக, மாவட்ட அளவில் மூன்று ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பொது நூலகத்துறையின் சார்பில் வழங்கப்படுகிறது.


கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''நூலகத்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு இத்திட்டம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


 பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தலைமையாசிரியர்களுக்கு இத்திட்டம் தொடர்பான தகவல் அறிவிப்பு அனுப்பப்பட்டு வருகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment