பள்ளிக்கல்வி மேலாண்மை இணைய பதிவில் சிக்கல் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

பள்ளிக்கல்வி மேலாண்மை இணைய பதிவில் சிக்கல்

 பள்ளிக்கல்வி மேலாண்மை இணைய பதிவில் சிக்கல்


உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்


.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களின் விபரங்களை 'பள்ளி மேலாண்மை தகவல் மையம்' என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது


.மாணவர்களின் பெயர், பள்ளி, பெற்றோரின் விபரங்கள், ரத்த வகை, எடை, உயரம் உட்பட பல்வேறு விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. தற்போது, மாணவர் சேர்க்கை விபரங்களை பதிவேற்றம் செய்ய, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 விபரங்களை பதிவு செய்வதில் பல்வேறு நெட்ஒர்க் சிக்கல் ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்


.விபரங்களை 'ஆன்லைனில்' பதிவு செய்வதற்கு, கிராமப்பகுதி பள்ளிகளில் மீண்டும் 'நெட்ஒர்க்' இல்லாமல், பல நேரங்களில் இஎம்ஐஎஸ் சர்வர் செயல்படுவதிலும் பிரச்னை ஏற்படுகிறது. 


இதனால், சில பள்ளிகளில், சேர்க்கை அதிகரித்துள்ள நிலையிலும், அதனை பதிவேற்றம் செய்ய முடியாமல், உள்ளனர்.கல்வித்துறை சர்வர் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment