விடாமுயற்சியில் 'நீட்' தேர்வில் சாதித்த விருதுநகர் மாணவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 21, 2020

விடாமுயற்சியில் 'நீட்' தேர்வில் சாதித்த விருதுநகர் மாணவி

 விடாமுயற்சியில் 'நீட்' தேர்வில் சாதித்த விருதுநகர் மாணவி


தமிழ் வழியில் படித்ததால் தனியார் பயிற்சி மையத்தால் புறக்கணிக்கப்பட்ட விருதுநகர் மாணவி நந்திதா 19, 3வது முயற்சியில் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றார்.


விருதுநகர் சூலக்கரை வ.உ.சி., தெரு கிருஷ்ணமூர்த்தி~உமாமகேஸ்வரி தம்பதியின் மகள் நந்திதா. விருதுநகர் ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தார்.


 பிளஸ் 2ல் 1110 மதிப்பெண் பெற்றார். 2018 'நீட்' தேர்வில் 177 மதிப்பெண் எடுத்தார்.பிறகு சென்னை தனியார் பயிற்சி மையத்தில் சேர முயன்றார்.


தமிழ் வழியில் படித்ததால் புறக்கணிக்கப்பட்டார். இதையடுத்து திருச்சி தனியார் அகடாமியில் பயிற்சி பெற்று 2019 தேர்வில் 378 மதிப்பெண் பெற்றவர் திருநெல்வேலி தனியார் அகடாமியில் பயின்று தற்போதைய தேர்வில் 568 மதிப்பெண் பெற்றார்.


 இவரது தந்தை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் ஆய்வக உதவியாளராகவும், தாய் தனியார் ஊழியராகவும் பணிபுரிகின்றனர்.


மாணவி நந்திதா கூறுகையில், ''எந்த மீடியத்தில் படித்தாலும் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம். ஒரு முறை தோற்றால் மனம் தளராதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். 3வது முயற்சியில் தான் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது.


 கல்வி அறிவை புத்தகத்தில் பெற்றாலும் உலக அறிவை தினமலர் நாளிதழில் தான் பெற்றேன். பட்டம் இதழை விரும்பி படிப்பேன்,'' என்றார்.

No comments:

Post a Comment