தலாய் லாமாவின் தலைமையில் நடந்த உலகளாவிய வலைபரப்பு நிகழ்வில் வேலம்மாள் பள்ளி மாணவி பங்கேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 21, 2020

தலாய் லாமாவின் தலைமையில் நடந்த உலகளாவிய வலைபரப்பு நிகழ்வில் வேலம்மாள் பள்ளி மாணவி பங்கேற்பு

 தலாய் லாமாவின் தலைமையில் நடந்த உலகளாவிய வலைபரப்பு நிகழ்வில் வேலம்மாள் பள்ளி மாணவி பங்கேற்பு


முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் பேரவை மாபெரும் சர்வதேச நேரடி வளைபரப்பு நிகழ்ச்சியை திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா தலைமையில் நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


உலக அமைதியும் நல்லிணக்கத்தையும் மேற்கோளாக கொண்டு வலைப்பரப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான கேள்வி, பதில் அமர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. 


இதில் சென்னை பருத்திப்பட்டு வேலம்மாள் பள்ளியின் 12ம் வகுப்பை சேர்ந்த மாணவியும், மாணவர் பேரவை தலைவியுமான ச.கீர்த்தி கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். வேலம்மாள் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவியை வாழ்த்தியது. 

No comments:

Post a Comment