அரியர் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட பல்கலை.களுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 31, 2020

அரியர் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட பல்கலை.களுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்

 அரியர் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட பல்கலை.களுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்


அரியர் பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகங்கள் விரைவாக வெளியிட வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


கரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் அரியர் பாடத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில்இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதேநேரம் நீதிமன்ற வழக்கால் அரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.


இதைக் கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து தேர்வு முடிவுகளையும் விரைவில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


மேலும், பல்கலை. மானியக் குழுவின் (யுஜிசி)உத்தரவின்படி மாணவர் சேர்க்கையை நவ.30-க்குள் முடித்து, வகுப்பு களைத் தொடங்கவும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment