பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கிய தம்பதி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கிய தம்பதி

 பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கிய  தம்பதி


பூனை வளர்க்க ஆசைப்பட்டு பிரான்ஸ் நாட்டு தம்பதி ஒன்று புலிக்குட்டியை வாங்கியதால் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.


பிரான்ஸ் நாட்டின் லே ஹார்வே நகரைச் சேர்ந்த தம்பதி சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர்.


 இந்நிலையில் ஆன்லைன் விளம்பரம் ஒன்றின் மூலமாக பூனை என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை 2018 ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ 5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்.


ஆனால், சில நாட்களில் குட்டியில் ஏற்பட்ட உருவ மாற்றத்தையடுத்து அவர்களுக்கு சந்தேகம் வந்ததால் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


 இதையடுத்து அவர்கள் வளர்த்து வந்தது இந்தோனேஷியாவின் சுமத்ரான் வகை புலி என்று தெரியவந்தது. பின்னர் 2 வருட விசாரணைக்கு பிறகு பாதுகாக்கப்பட்ட விலங்கை கடத்தியாக லே ஹார்வே தம்பதி 9 பேர்களுடன் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்ட்டனர்.

No comments:

Post a Comment