நீட் தேர்வு: தமிழக அரசின் இலவசப் பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

நீட் தேர்வு: தமிழக அரசின் இலவசப் பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம்

 நீட் தேர்வு: தமிழக அரசின் இலவசப் பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம்


தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வு எழுதிய 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்


நீட் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் இந்த ஆண்டுத் தேர்ச்சி விகிதம் 57.44 ஆக அதிகரித்துள்ளது.


 இதுவே கடந்த ஆண்டு 48.57% ஆக இருந்தது. 2019-ம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 8.87 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.


நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 877 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இந்த ஆண்டு 4 மாணவர்கள் 500-க்கும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 15 பேர் 400 முதல் 500 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 


300 முதல் 400 வரையான மதிப்பெண்களை 70 பேர் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்


தேர்வெழுதிய 6,692 மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் 3 பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மருத்துவ இடங்களைப் பொறுத்தவரை, தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூடுதல் மதிப்பெண்களே கலந்தாய்வில் இடங்களைப் பெற்றுத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் பட்சத்தில், அதிக அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment