தேசிய கல்வி உதவி திட்டம்; சிறுபான்மையினருக்கு அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

தேசிய கல்வி உதவி திட்டம்; சிறுபான்மையினருக்கு அழைப்பு

 தேசிய கல்வி உதவி திட்டம்; சிறுபான்மையினருக்கு அழைப்பு


தேசிய கல்வி உதவி திட்டத்தில், தமிழகத்தில் நடப்பாண்டில், 1.35 லட்சம் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு உதவி வழங்கப்பட உள்ளது.


மத்திய அரசால், சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கல்வி உதவி வழங்கப்படும் பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவருக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவி.தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவருக்கு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவி வழங்கப்படுகிறது.


 அதற்கான விண்ணப்பங்களை, www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.கல்வி நிறுவனங்கள், புதிதாக விண்ணப்பிக்க, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். 


புதுப்பிக்க, கல்வி நிறுவனங்களின் குறியீட்டு எண்ணை, மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.


விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment