பிரதமரின் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

பிரதமரின் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு

 பிரதமரின் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு


நீலகிரி மாணவர்கள், பிரதமரின் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:


அலுவலக தரத்திற்கு குறைவான பணியில் இருந்த, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளில், 2020--21ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டில், தொழில் படிப்பு பயிலும் மாணவ, மாணவியர், மைய படைவீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும், பிரதமரின் கல்வி உதவி தொகையை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்


.12ம் வகுப்பில், 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்று, தொழில் படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். 


இதற்காக விண்ணப்பத்தினை www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.


இது தொடர்பான, விவரம் அறிய, நீலகிரி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில், நேரில் அல்லது அலுவலக தொலைபேசி எண்--0423--2444078 மூலம் தொடர்பு கொள்ளலாம்.


 விண்ணப்பங்களை வரும் டிச., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment