நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 18, 2020

நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை

 நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை


நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் பதிலளித்துள்ளது.


நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்தது தொடர்பான வழக்கில்  15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி கைது செய்தது.


இதில் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை வைத்து, விபரங்களைத் தருமாறு  சிபிசிஐடி ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.


இந்நிலையில் குறிப்பிட்ட பத்து பேரின் புகைப்பட  விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் சிபிசிஐடிக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் சிபிசிஐடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment