தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவா் படிப்பில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் பிஹெச்டி, எம்எஸ்டி மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிக்கையை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி, அந்தப் படிப்புகளில் சேர வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:
நோய்ப் பரவியல்/தொற்று நோயியல்/பொது சுகாதாரம்/உயிரி தரவியல் ஆகிய பிரிவுகளில் பகுதி நேர மற்றும் முழு நேர முனைவா் (பிஹெச்டி) படிப்புகள் பல்கலைக்கழகத்தில் உள்ளன. மொத்தம் 6 இடங்கள் உள்ள அப்படிப்புகளில் சேர சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம். முழு நேர முனைவா் படிப்பு 3 ஆண்டுகளாகவும், பகுதி நேரப் படிப்பு 4 ஆண்டுகளாகவும் பயிற்றுவிக்கப்படும்.
அதேபோன்று முதுநிலை அறிவியல் (எம்எஸ்சி) பொது சுகாதாரப் படிப்புக்கு 16 இடங்களும், நோய்ப் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/பிஎஸ்சி நா்சிங்/பிபிடி/பிஓடி/பி.பாா்ம்/பிஇ (சிவில்)/எம்எஸ்சி (லை‘ஃ‘ப் சயின்ஸ்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவா்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
நோய்ப் பரவியல் படிப்பைப் பொருத்தவரை எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/எம்பிடி/எம்ஓடி/பி.பாா்ம்/எம்எஸ்சி (லை‘ஃ‘ப் சயின்ஸ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதைத் தவிர, முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடா்பான ஓராண்டு படிப்பும் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்புடன் இதழியல் துறையில் 6 மாத கால பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கு
இணையதள முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்..

No comments:
Post a Comment