2,423 கவுரவ விரிவுரையாளர் அரசு கல்லூரிகளுக்கு அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 7, 2020

2,423 கவுரவ விரிவுரையாளர் அரசு கல்லூரிகளுக்கு அனுமதி

 2,423 கவுரவ விரிவுரையாளர்  அரசு கல்லூரிகளுக்கு அனுமதி


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் என்ற, தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழகத்தில் செயல்படும், 100க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், நிரந்தர ஆசிரியர்கள் தவிர, மற்ற காலி இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. 


கடந்த ஐந்தாண்டுகளாக, கவுரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில், தற்காலிக அடிப்படையில், உதவி பேராசிரியர்கள் பணியில் உள்ளனர். 


இவர்களுக்கு, மாதம் தலா, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. 



ஆண்டுதோறும் விடுமுறை காலம் தவிர மீதம் உள்ள, 11 மாதங்கள் சம்பளம் வழங்கப்படும். இந்த கல்வி ஆண்டில் மொத்தம், 3,443 காலியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, உயர்கல்வி துறையிடம், கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி கேட்டது.


இந்நிலையில், அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட, 2,423 இடங்களில் மட்டும், கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது. 


இதற்காக, ஆறு மாதங்களுக்கு, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களில், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளின்படி, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment