'ஆன்லைனில்' விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு
கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்காதவர்கள், நேரில் விண்ணப்பித்து பயன்பெறும்படி கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
பொன்னேரி உலக நாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இங்கு, ஆகஸ்ட் மாதம், 28ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பம் செய்து, குறிப்பிட்ட தேதியில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.
இதுவரை பல்வேறு பாடப் பிரிவுகளில், 1,150 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை கால அவகாசம் இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.கணிதம், இயற்பியல், தாவரவியல் பாடங்களில், 200 இடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2வில், அறிவியல் பாடம் படித்த மாணவர்கள் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
'ஆன்லைனில்' விண்ணப்பிக்க தவறியவர்கள், கல்லூரியில் நேரில் வந்து விண்ணப்பித்து, மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேரலாம் என, கல்லூரி முதல்வர் சேகர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

No comments:
Post a Comment