டீ விற்பனை செய்யும் தனியார் பள்ளி பெண் முதல்வர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 7, 2020

டீ விற்பனை செய்யும் தனியார் பள்ளி பெண் முதல்வர்

 டீ விற்பனை செய்யும் தனியார் பள்ளி பெண் முதல்வர்


:கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளி பெண் முதல்வர், டீ விற்பனை செய்து வருகிறார்.


சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; மனைவி செல்வி, 32. இவர், முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார்.


இவரது கணவர் சிவா நடத்தி வரும் மழலையர் பள்ளியில், முதல்வராக பணிபுரிந்து வருகிறார். மார்ச், 24 முதல், ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


இதனால், வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பஸ் ஸ்டாப் அருகில், ஆவின் பாலகம் பெட்டிக் கடையில், டீ விற்பனை செய்து வருகிறார்.


செல்வி கூறியதாவது:என் கணவர் நடத்தி வரும், அக் ஷய வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வருகிறேன்.


 ஊரடங்கால் பள்ளி மூடி இருப்பதால், போதிய வருவாய் இல்லை.கிராமப்புற மாணவ ~ மாணவியரின் பெற்றோரால், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவர்களை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை.


குடும்ப வருவாய்க்காக, என் மாமனார் நடத்தி வரும் பெட்டிக் கடையில் தினமும், டீ விற்பனை செய்து வருகிறேன். ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர் ~ ~ஆசிரியைகள் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment