பெயர்களை அடையாளம் சொல்லும் மழலை :இந்திய சாதனை புத்தகத்தில் இடம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

பெயர்களை அடையாளம் சொல்லும் மழலை :இந்திய சாதனை புத்தகத்தில் இடம்

 பெயர்களை அடையாளம் சொல்லும் மழலை :இந்திய சாதனை புத்தகத்தில் இடம்


மதுரை விளாச்சேரி டாக்டர் லாவண்யா ராகவி, வங்கி மேலாளர் முகேஷ்கண்ணா தம்பதியின் 19 மாத குழந்தை ருத்திக், பெயர்களை அடையாளப்படுத்தும் சாதனைக்காக, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றான்.


மழலையின் சாதனை குறித்து தாய் கூறியதாவது:


வீட்டில் செல்லமாக குழந்தையை கூப்பிடும் போது என்ன கண்ணா… என்போம். பேச ஆரம்பித்த போது அம்மா, அப்பா என்று சொல்லவில்லை. 


ஒவ்வொரு பொருளாக என்ன என்ன… என்று கேட்க ஆரம்பித்தான். அவனது கேள்விக்கு பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சொல்லி கொடுத்தோம். சீக்கிரமே அவனுக்கு போரடித்து விட்டதால் பறவை, விலங்குகள் 


புத்தகம், அடிப்படை தமிழ் புத்தகங்களை வாங்கி சொல்லி கொடுத்தோம். 25 பறவைகளின் படங்களை காண்பித்து பெயரை கேட்டால் அந்த பறவையின் படத்தை அடையாளம் காண்பிப்பான். 


இதே போல விலங்குகள் பெயர் மற்றும் நிறங்கள். தமிழ் எழுத்துக்களை அடையாளம் காட்டுவான். காரில் ஏறி உட்காரும் போது காரின் பாகங்களை சொன்னால் சரியாக புரிந்து கொண்டு தொட்டு காட்டுவான்.


குழந்தையின் அனைத்து செயல்களையும் வீடியோவாக எடுத்து இந்திய சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்தோம். அவர்களும் பரிசோதனை செய்த பின், சாதனை மழலைக்கான விருது வழங்கினர். அடுத்ததாக உலக சாதனை புத்தகத்திற்கு முயற்சிக்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment