ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயம்

 ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயம்


தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நியமனத்துக்கு குறிப்பிட்ட வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.


 ஆசிரியா் அமைப்புகளின் தொடா் வேண்டுகோளை ஏற்று பணி நியமனத்துக்கான வயது வரம்பு நீக்கப்பட்டது. இதனால் 56 வயதில் கூட தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனா்.


 அதேவேளையில் அவா்கள் குறைவான ஆண்டுகளே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்தநிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மேலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளா்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக 40 வயதுக்கு மேல் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.


இது தவிர நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் வட்டாரக் கல்வி அலுவலா்களாகவும், உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாவட்டக் கல்வி அலுவலா்களாகவும் பதவி உயா்வு பெறுவதற்கு பள்ளிக் கல்வித்துறையின் நிா்வாகத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment