படித்து கலெக்டராக வேண்டும் என்று கூறிய மாணவனை தனது இருக்கையில் அமர வைத்து கவுரவித்த உதவி கலெக்டர்
குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மகன் நரசிம்மன்.
அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் நரசிம்மன், இருளர் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதுகுறித்து, விசாரணை செய்த குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் நேற்று மாணவன் நரசிம்மனை அழைத்து சாதி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது, ஷேக் மன்சூர் மாணவனிடம், நீ படித்து என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறாய்? என கேட்டார். அதற்கு நரசிம்மன், நான் ஐஏஎஸ் படித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினான்.
இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட உதவிகலெக்டர் ஷேக் மன்சூர், மாணவன் நரசிம்மனை தனது இருக்கையில் அமர வைத்து சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
No comments:
Post a Comment