எம்.பி.பி.எஸ்.,மாணவர்களுக்கு 'ஆன்லைன்' பாடம் தடையில்லை
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 'ஆன்லைன்' வகுப்பு நடத்த தடையில்லை' என, தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.
அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும், தேசிய மருத்துவ கமிஷன் செயலர் ஆர்.கே.வாட்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை என, செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக, அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி, 'தியரி' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த கொரோனா காலத்துக்கு மட்டும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி உண்டு.
மீண்டும் கல்லுாரிகளை திறந்ததும், ஆன்லைனில் நடத்தப்பட்ட வகுப்புகளுக்கான செய்முறை வகுப்புகள், நேரடியாக நடத்தப்படும்.
வெளிநாடுகளில் உள்ள சில கல்வி நிறுவனங்களில், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடப்பதாக குறிப்பிடப்பட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் தகவல் கேட்கப்பட்டது.
அதற்கு மட்டுமே, மருத்துவ கவுன்சில் பதில் அளித்தது. கொரோனா தொற்று சூழலை வைத்து அளிக்கவில்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment