மாணவர்கள் சான்றிதழை பதிவிறக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 23, 2020

மாணவர்கள் சான்றிதழை பதிவிறக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

 மாணவர்கள் சான்றிதழை பதிவிறக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்


சிபிஎஸ்சி, தங்கள் மாணவர்களுக்காக டிஜிட்டல் முறையில் ஆவணங்களை வழங்க பர்னியாம் மஞ்சுஷா,டிஜிலாக்கர் ஆகிய செயலிகளை பயன்படுத்தி வருகிறது.


இதில் 10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்கள், மதிப்பெண் அட்டைகள், இடம்பெயர்வுச் சான்றிதழ்கள், முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்கள் என 12 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு டிஜிலாக்கர் செயலியில் சேமித்து வைத்துள்ளது.


மாணவர்கள், சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும்போது ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. 


இந்நிலையில், எந்த ஒரு ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல் முக அடையாள தொழில்நுட்பம் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.


அதன்படி, மாணவர் தனது முகத்தை வெப் கேமரா அல்லதுசெல்போனில் இருக்கும் கேமராவில் நேரடியாக காட்டவேண்டும். 


அப்போது, ஏற்கெனவே சிபிஎஸ்இ தேர்வு அடையாள அட்டையில் இருக்கும் புகைப்படத்துடன் ஒப்பீடு செய்யப்படும்.


முக அடையாளம் ஒத்துப்போகும் போது உரிய ஆவணங்கள், மாணவர்களின் இ-மெயிலுக்கு அனுப்பப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment