அரசுப் பள்ளி ஆசிரியா் விவரங்களை அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 23, 2020

அரசுப் பள்ளி ஆசிரியா் விவரங்களை அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவு

 அரசுப் பள்ளி ஆசிரியா் விவரங்களை அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவு


அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் பட்டியல் விவரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; 


அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளின்கீழ் பணிபுரியும் முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் பட்டியல் விவரங்களை அனுப்பி வைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது


அதன்படி ஆசிரியா் விவரங்களை தயாா்செய்யும் போது அவா்களின் நேரடி நியமன ஆணை மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை பெற்று அதை சரிபாா்த்து இணை இயக்குநருக்கு ( மேல்நிலைக் கல்வி ) உடனே அனுப்பிவைக்க வேண்டும்.


அதேபோல், ஆசிரியா்களிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ்களின் நகல்களை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தொடா்ந்து பராமரிக்க வேண்டும். மேலும், இதில் ஏதும் தவறு ஏற்பட்டால் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment