பிக்காசோ ஓவியம் ஆடை டிசைனாகிறது: மாணவியின் கலைநய திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 25, 2020

பிக்காசோ ஓவியம் ஆடை டிசைனாகிறது: மாணவியின் கலைநய திட்டம்

 பிக்காசோ ஓவியம் ஆடை டிசைனாகிறது: மாணவியின் கலைநய திட்டம்


நேற்று, உலக புகழ் பெற்ற ஓவியரான பிக்காசோ பிறந்தநாள். இதை முன்னிட்டு, திருப்பூர் 'நிப்ட்~டீ' கல்லூரி அப்பேரல் பேஷன் டிசைன் முதலாம் ஆண்டு மாணவி ஸ்நேகா அட்ரியானா, பிக்காசோ வரைந்த ஓர் ஓவியத்தை தத்ரூபமாக தீட்டி, அசத்தியுள்ளார்.


ஸ்நேகா அட்ரியானா கூறியதாவது:எனது சொந்த ஊர் திருச்சி; கடந்த 1937ல், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள், ஸ்பெயின் நாட்டின் கார்னிகா நகரை, குண்டு வீசி தகர்த்தன. கார்னிகா நகரின் நிலையை உலகுக்கு உணரச்செய்யும்வகையில், பிரபல ஓவியர் பிக்காசோ, ஓர் ஓவியத்தை வரைந்தார். 


அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கார்னிகாவின் மோசமான நிலையை வெளிப்படுத்தும் அவரது ஓவியத்தை தீட்டியுள்ளேன்.ஏழு அடி நீளம், மூன்றரை அடி உயர போர்டில், குழந்தையை பறிகொடுத்த தாயின் மன குமுறல், விளக்கு ஏந்தியபடி, வெளிச்சத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்; உருக்குலைந்த வீடு; மிரட்சியுடன் காணப்படும் மாடு முதலான விலங்குகளை உள்ளடக்கி ஓவியத்தை வரைந்துள்ளேன்.பத்து நாள் முயற்சியின் பயனாக தற்போது, ஓவியம் முழுமை பெற்றுள்ளது. 


சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு மிகுந்த ஆர்வம். உலக புகழ் பெற்ற ஓவியரின் ஓர் ஓவியத்தை தீட்டியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.கல்லூரி திறந்தபின், இந்த ஓவியத்தையே டிசைனாக மாற்றி, ஆடை தயாரிப்பதற்கான முயற்சிகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment